Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோட்டாவினால் மன்னிப்பளிக்கப்பட்ட இராணுவ வீரரால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுதினம்

T

The Leader Desk

டிசம்பர் 21, 2022 • 6:03 AM

கோட்டாவினால் மன்னிப்பளிக்கப்பட்ட இராணுவ வீரரால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுதினம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகாரியினால் இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 8 தமிழர்களின் நினைவேந்தல் வடக்கில் இடம்பெற்றது.
  • மிருசுவில் படுகொலைகளின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
  • இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை மனதில் நிறுத்தி இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
  • தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரத்நாயக்க முத்யன்செலாகே சுனில் ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020 மார்ச்சில் விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
எழுத்து அளவு:

அதிகாரியினால் இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 8 தமிழர்களின் நினைவேந்தல் வடக்கில் இடம்பெற்றது.

மிருசுவில் படுகொலைகளின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை மனதில் நிறுத்தி இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

நினைவேந்தலில் முதலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அதன்பின்னர் சுடர் ஏற்றி, பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட  கொல்லப்பட்டவர்களின் உறவுககள், சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டனர்.

vbxcvb.png

ஞாபாலன் ரவிவீரன், செல்லமுத்து தேவகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயசந்திரன், கதிரவன் ஞானசந்திரன், ஞானசந்திரன் ஷாந்தன் மற்றும் ஐந்து வயதான வில்வராஜா ஆகியோரை, 2000 ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதியன்று கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற முதல் இராணுவ அதிகாரியாக ரத்நாயக்க முதியன்சேலாகே சுனில் ரத்நாயக்க என்பவர் இடம்பெற்றிருந்தார்.

இவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகிய இருவரும் கட்டளையிடும் அதிகாரிகளாகப் பணிபுரிந்த கஜபா படைப்பிரிவில் பணிபுரிந்த இராணுவ வீரராவார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரத்நாயக்க முத்யன்செலாகே சுனில் ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020 மார்ச்சில் விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி 8 தமிழர்களைக் கொன்ற வழக்கில், 2019 ஏப்ரலில் அவருக்கு உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது. புவனேக அலுவிஹார, நளின் பெரேரா, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்சில், இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது.

xzzdf.png

அவரது விடுதலையை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உள்ளிட்ட சர்வதேச சக்திகள் கடுமையாக கண்டித்தன. அத்துடன், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கையின் 22 அமைப்புகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில்,  எந்தவொரு குற்றத்தையும் செய்யும் இராணுவத்தினர் அவற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்ற ஒரு பயங்கரமான செய்தி, ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தன.

இதேவேளைய நினைவேந்தலில் பங்குபற்றிய உறவினர்கள், “தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்காக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமா? சுய ஆட்சியா?  என்ற பொதுஜன வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கூறுவோம்” என்ற முக்கிய விடயங்களை வலியுறுத்தினர்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...