Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

எல்டிடிஈயின் சொத்துக்கள் குறித்து முக்கிய அறிவிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 21, 2022 • 4:01 AM

எல்டிடிஈயின் சொத்துக்கள் குறித்து முக்கிய அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளே எப்படியான தீர்வு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
  • “அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி வழங்கப்படும் தீர்வே நிலையானதாக இருக்கும்.
  • யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்து 2010ஆம் ஆண்டே உலகத் தமிழர் பேரவை ஸ்தாபிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளே எப்படியான தீர்வு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய எந்தவொரு முயற்சிகளையும் நாம் வரவேற்கிறோம். தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய நடைமுறையாக சர்வகட்சி தலைவர் கூட்டத்தைப் பார்க்கலாம்.ஆனால், அதிபர் ரணில் விக்ரமசிங்க இதில் ஒரு சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கிறாரா என்கிற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“புதிய அரசியலமைப்பு யோசனைக்கு கடந்த காலத்தில் உலகத் தமிழர் பேரவையும் யோசனைகளை வழங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் நாம் கூறும் தீர்வுதான் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென நாம் கூறவில்லை. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பேசி கொண்டுவரும் தீர்வை நாம் ஆதரிப்போம்.

“இந்தியாவின் பங்களிப்பு இல்லாது கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்வும் நிலைகொள்ளாது. 70 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் வாழும் நாடு இந்தியா. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரலாற்று தொடர்புகள் உள்ளன.

“அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி வழங்கப்படும் தீர்வே நிலையானதாக இருக்கும். இவ்வாறான நிலையில், சுதந்திர தினத்துக்கு முன்னர் இதனை செய்வது சாத்தியமில்லை. ஆனால், இதுவொரு முக்கியமான முயற்சி.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தவிதமான சொத்துகளோ அல்லது கப்பல்களோ உலகத் தமிழ் பேரவையிடம் இல்லை. யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்து 2010ஆம் ஆண்டே உலகத் தமிழர் பேரவை ஸ்தாபிக்கப்பட்டது.

“எனவே இது தொடர்பில் எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் போலியானவை. தமிழீழக் கோரிக்கையைக் கைவிடவில்லை. ஆனால், சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கை தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அந்தத் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டும். இதற்கு நாம் ஆதரவளிப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எல்டிடிஈயின் சொத்துக்கள் குறித்து முக்கிய அறிவிப்பு | Tamil Leader | We Lead the Nation