Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

டிராக்டருடன் டிப்பர் வாகனம் மோதி கொடூர விபத்து; 5 பேர் பலி!

T

The Leader Desk

ஆகஸ்ட் 21, 2026 • 3:53 AM

டிராக்டருடன் டிப்பர் வாகனம் மோதி கொடூர விபத்து; 5 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
  • விபத்தில் டிராக்டரின் இழுவைப்பெட்டியில் (Trailer) பயணித்த 10 பேரில் எண்மர் பலத்த காயமடைந்து மொணராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
  • உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடைய தொடம்கஸ்லந்த, புத்தள மற்றும் சொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளவாய - மொணராகலை வீதியின் கும்புக்பன களுபாலத்திற்கு (கருப்பு பாலம்) மேல் வெள்ளவாய திசையை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம், எதிர்த்திசையில் வந்த டிராக்டர் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் டிராக்டரின் இழுவைப்பெட்டியில் (Trailer) பயணித்த 10 பேரில் எண்மர் பலத்த காயமடைந்து மொணராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடைய தொடம்கஸ்லந்த, புத்தள மற்றும் சொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஏனைய மூவரும் தற்போது மொணராகலை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் ஓட்டுநரும் டிராக்டர் வாகனத்தின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மொணராகலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...