Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

T

The Leader Desk

ஜூலை 21, 2026 • 4:55 AM

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்கத் திட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
  • நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலன்றின் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
  • நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலன்றின் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களுக்கு இவ்வாறான நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த கட்டமாக இவ்வாறான நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தும் இடங்களைச் முற்றுகையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உரிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் வர்த்தகர்கள் இந்த நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்களாயின், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...