விலக்கிக்கொண்டமையால் விலங்கு உணவு உற்பத்தி நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாலும், தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணத்தினாலும் முட்டை உற்பத்தி 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்ணைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 95 இலட்சமாக இருந்த முட்டைகளின் எண்ணிக்கை, தற்போது 75 இலட்சத்திற்கும் 80 இலட்சத்திற்கும் இடைப்பட்ட தொகையாகக் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடும் விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எம். குணசேகர, இதன் காரணமாக முட்டையின் மொத்த விற்பனை விலை கடந்த நாட்களில் 32 ரூபாவிற்கும் 35 ரூபாவிற்கும் இடைப்பட்டதாக காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலவும் சோளத் தட்டுப்பாடு காரணமாக, அதற்கு மாற்றீடாக விலங்கு உணவிற்கு அரிசியைப் பயன்படுத்தும்போது முட்டையின் மஞ்சள் கரு உருவாகுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், சோளத்தைப் பயன்படுத்தும்போது மாத்திரமே முட்டையின் மஞ்சள் கரு நிறமடைகின்றது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, சந்தைக் கண்காணிப்புகளின் படி தற்போது முட்டையொன்றின் சில்லறை விலை 43 ரூபாவிற்கும் 45 ரூபாவிற்கும் இடைப்பட்டதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


