Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

2023 முதல் காலாண்டில் ஐ.எம்.எஃப் கிடைக்க வாய்ப்பு

T

The Leader Desk

டிசம்பர் 29, 2022 • 4:45 PM

2023 முதல் காலாண்டில் ஐ.எம்.எஃப் கிடைக்க வாய்ப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
  • இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையுடனான பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
  • “சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விட, இலங்கை மீண்டுமொருமுறை ஏனைய கடன் வழங்குனர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியமானது.
எழுத்து அளவு:

எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கடன் பெறுவதற்கான அனுமதி கிடைத்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இலங்கையுடனான பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

“சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விட, இலங்கை மீண்டுமொருமுறை ஏனைய கடன் வழங்குனர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியமானது.

“நிதி உதவிக்கான நிறைவேற்று சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த டிசம்பர் காலக்கெடுவிற்குள் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தவறியிருந்தது.“

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கடனை பெறுவதற்கு தேவையான செயன்முறைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகின்றது.

“இதனிடையே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தாமதமடைவதற்கு சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சு இழுத்தடிப்பு மாத்திரம் காரணம் அல்லவென பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய அதிகாரியொருவர் கூறியிருந்தார்.

“இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாகப் பலர் கூறியுள்ள போதிலும், எந்தவொரு இருதரப்பு கடன் வழங்குநர்களும் இதுவரை முறைப்படியோ அல்லது எழுத்துபூர்வமாகவோ கடன் மறுசீரமைப்பு குறித்து எந்த உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை” என்றார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

2023 முதல் காலாண்டில் ஐ.எம்.எஃப் கிடைக்க வாய்ப்பு | Tamil Leader | We Lead the Nation