Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

தேயிலை மற்றும் மரக்கறித் தோட்டங்களுக்கு இயற்கை உர மானியம் வழங்க அவதானம்

T

The Leader Desk

மார்ச் 13, 2023 • 3:04 AM

தேயிலை மற்றும் மரக்கறித் தோட்டங்களுக்கு இயற்கை உர மானியம் வழங்க அவதானம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தோட்டங்களுக்கும் வழங்குவதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
  • இந்நிலையிலேயே, நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அந்த உரம் தேவையில்லையெனில், அதனை தேயிலை மற்றும் மரக்கறிப் பயிர்ச்செய்கைகளுக்கு வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
  • பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளைக்கு, அரசாங்கத்தினால் 16,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
  • அதன்படி, ஒரு ஹெக்டெயார் நெல் விவசாய நிலத்துக்கென்று 20,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

தோட்டங்களுக்கும் வழங்குவதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

சேதன மற்றும் கொம்போஸ்ட் உரங்களைப் பெற்றுக்கொள்ள நெல் விவசாயிகள் மறுத்ததை அடுத்தே, அரசாங்கம் அவர்களக்கு இந்தச் சலுகையை வழங்கி வந்தது.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சேதனப் பசளை மற்றும் கொம்போஸ்ட் போன்றன உரிய தரத்தில் அமையப்பெறாமையால் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு, விவசாயிகள் மறுப்புத் தெரிவித்தனர் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சில் கடந்த பலமுறை இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது, விவசாயிகள் இது குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

இந்நிலையிலேயே, நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அந்த உரம் தேவையில்லையெனில், அதனை தேயிலை மற்றும் மரக்கறிப் பயிர்ச்செய்கைகளுக்கு வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022 – 2023 பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளைக்கு, அரசாங்கத்தினால் 16,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஒரு ஹெக்டெயார் நெல் விவசாய நிலத்துக்கென்று 20,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இம்முறை பெரும்போகத்துக்கு 10,000 மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...