Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை - தேர்தல் முடிவு குறித்து ஜனாதிபதியின் கருத்து..!

T

The Leader Desk

மார்ச் 13, 2023 • 11:06 AM

எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை - தேர்தல் முடிவு குறித்து ஜனாதிபதியின் கருத்து..!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • இதையடுத்து, நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
  • உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.
எழுத்து அளவு:

தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் சுயாதீனத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்திலும் ஆளும் கட்சி தலையீடு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

நிலைப்பாட்டில் மாற்றம்

இந்த நிலையில், தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி திறை சேரிச் செயலருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளித்த திறை சேரியின் செயலர், நிதியை விடுவிக்குமாறு  நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்கேக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்ததுடன், அவரது அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து, நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அதிபரிடம் கேள்வி எழுப்பிய போது, "தேர்தல் தொடர்பில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை.

 நான் திரும்பவும் சொல்கின்றேன் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்.

நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும் சவாலுக்குப்படுத்த முடியாது" என்று ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...