Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

ஜனாதிபதிக்கு 'அபிநந்தன' விருது வழங்கி கௌரவிப்பு

T

The Leader Desk

மார்ச் 13, 2023 • 8:59 AM

ஜனாதிபதிக்கு 'அபிநந்தன' விருது வழங்கி கௌரவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
  • கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான ´இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த மாநாடு - 2023´ இற்கு இணைந்த வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
  • கனகரத்னம் கணேஸயோகன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.
  • செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
எழுத்து அளவு:
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு ´அபிநந்தன விருது´ வழங்கினார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான ´இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த மாநாடு - 2023´ இற்கு இணைந்த வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, இரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன், ஜனாதிபதி சட்டத்தரணி உபாலி ஏ. குணரத்ன. கனகரத்னம் கணேஸயோகன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், நீதியரசர் அசோக நிஹால் டி சில்வா, நீதியரசர் டி.ஜே.த.எஸ். பாலபடபெந்தி, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், ´அபிநந்தன´ குழுவின் தலைவர் ஜனப்ரித் பெர்னாண்டோ, இணைப்பாளர் சமத் பெர்னாண்டோ, உள்ளிட்ட பிரதம அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...