Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்; சிறு வாக்கு மீண்டும் தாமதமாகும் அறிகுறி

T

The Leader Desk

மார்ச் 12, 2023 • 4:33 AM

ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்; சிறு வாக்கு மீண்டும் தாமதமாகும் அறிகுறி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ள மொத்தத் தொகை 1100 மில்லியன் ரூபாயாகும்.
  • உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக கடந்த 9ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எழுத்து அளவு:

நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான அடிப்படை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் அந்த தொகையாவது தேவைப்படுவதாக அதன் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ள மொத்தத் தொகை 1100 மில்லியன் ரூபாயாகும்.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்கக் கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அமைச்சின் செயலாளரும் இது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பணம் வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆணைக்குழு அனுப்பிய கடிதத்தை, நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு eிதி ஒதுக்கீடு செய்வதற்கு தனது அனுமதி போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அங்கீகாரம் தேவை என நிதி அமைச்சின் செயலாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக கடந்த 9ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நித தடுத்து நிறுத்தப்படடக்கூடாது என நிதியமைச்சின் செயலாளருக்கு சட்ட மா அதிபருக்கும் உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...