Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதி! வெளியான முக்கிய அறிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 12, 2023 • 8:08 AM

அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதி! வெளியான முக்கிய அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாக்குகளுக்கான புதிய திகதியை அறிவிக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்கான திகதியாக ஏப்ரல் 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.
  • இவ்வாறான சூழ்நிலையில், எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான புதிய திகதி அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வாக்குகளுக்கான புதிய திகதியை அறிவிக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்கான திகதியாக ஏப்ரல் 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அஞ்சல் வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணியாளர் கங்கானி லியனகேயும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான புதிய திகதி அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிக் காலப்பகுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றங்களுக்குச் சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபா கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபா இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் முடிக்கப்பட உள்ளன, ஆனால் இதுவரை 54 மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...