Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ரயிலில் கைவிட்ட சிசுவின் பெற்றோர் கைது

T

The Leader Desk

மார்ச் 11, 2023 • 3:33 PM

ரயிலில் கைவிட்ட சிசுவின் பெற்றோர் கைது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
  • நேற்று (10) இரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கூடையொன்றில் இருந்து குறித்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
  • நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் ரயில் அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
எழுத்து அளவு:

ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுக் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று (10) இரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கூடையொன்றில் இருந்து குறித்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் ரயில் அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் பெற்றோரை கண்டறிய பொலிசார் விசாரணை ஆரம்பித்திருந்த நிலையில் கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ள நிலையில், நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளது.

பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரயிலில் கைவிட்ட சிசுவின் பெற்றோர் கைது | Tamil Leader | We Lead the Nation