Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

T

The Leader Desk

மார்ச் 8, 2023 • 2:04 PM

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
  • இதன்படி, சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி ரூ.
எழுத்து அளவு:

உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி ரூ. 50 முதல் 25 சதம் வரை குறைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.600 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி சீனி வரி 25 காசுகளாக குறைக்கப்பட்டதன் பின்னர் 25 சத வரியின் கீழ் 14 இலட்சம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 04 இலட்சம் மெற்றிக் தொன் பருப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த விற்பனையாளர்கள் மேலும் கூறுகின்றனர்.

இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலைகள் குறைவடைந்துள்ளமையின் பயனை இந்நாட்டு நுகர்வோர் பெற்றுக்கொள்ள வேண்டுமென வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு | Tamil Leader | We Lead the Nation