Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'நாட்டுக்கான எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்'

T

The Leader Desk

மார்ச் 7, 2023 • 9:34 AM

'நாட்டுக்கான எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே IMFக்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
  • சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம் என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
  • இதன்படி, நாட்டுக்கான தனது கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சர்வதேச நாணய நிதியம், இம்மாத இறுதிக்குள் தனது கடமையை நிறைவேற்றும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே IMFக்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க  நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

இதன்படி, நாட்டுக்கான தனது கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சர்வதேச நாணய நிதியம், இம்மாத இறுதிக்குள் தனது கடமையை நிறைவேற்றும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எந்த வகையான நாசகார செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்றொரு ஜூலை 09ஆம் திகதி சம்பவமொன்று இந்நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று கோரியதோடு, நாட்டை சீர்குலைப்பதை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் முப்படை மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உரையின் போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்  செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம்   என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை   நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுத்துள்ளதாகவும் தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும்  ஏற்படும்  கஷ்டங்கள் தொடரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை  பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல்  என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் திடீர் வரி நீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானதாகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள அமுல்படுத்தியதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாகவும், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி  இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதார பிரச்சினைகள்  ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க  தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...