Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பீரிஸை தொடர்ந்து சாகரவுக்கு பதவி இழப்பு?

T

The Leader Desk

மார்ச் 7, 2023 • 4:51 AM

பீரிஸை தொடர்ந்து சாகரவுக்கு பதவி இழப்பு?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன அறிவித்திருக்கும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சாகர காரியவசம் அவர்களையும் நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலம் தான் கேட்டதாகவும் ஆனால் முறையான கடிதம் கிடைக்கவில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜீ.எல்.பீரிஸை அக்கட்சியிலிருந்து நீக்குவதெனக் கூறப்படுவது வேடிக்கைக்குரிய விடயமாகும்.
எழுத்து அளவு:

நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன அறிவித்திருக்கும் நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சாகர காரியவசம் அவர்களையும் நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஜீ.எல்.பீரிஸை அக்கட்சியிலிருந்து நீக்குவதெனக் கூறப்படுவது வேடிக்கைக்குரிய விடயமாகும். உண்மையில், சாகர காரியவசம் அவர்களையே அக்கட்சியிலிருந்து நீக்க வேண்டும். காரணம், அவர்தான் கட்சியின் கொள்கைகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டுள்ளார்” என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில், தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலம் தான் கேட்டதாகவும் ஆனால் முறையான கடிதம் கிடைக்கவில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்ட போதிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை என காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த பதவிக்கு பொருத்தமானவரை தற்போது கட்சி பரிசீலித்து வருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதன் தவிசாளராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பணியாற்றினார்.

எனினும், கடந்த வருடம் முதல் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு,சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாடாளுமன்றில் செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...