Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'தீர்வுக்கான பயணத்தை ஒத்திவைக்க முடியாது'

T

The Leader Desk

மார்ச் 7, 2023 • 3:57 AM

'தீர்வுக்கான பயணத்தை ஒத்திவைக்க முடியாது'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் என்ற ஒரு விவகாரத்தை கையிலெடுத்து அவர்கள் தீர்வு முயற்சியை குழப்பியடிக்கும் வகையில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
  • “என்னால் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வகட்சி கூட்டங்களிலும் தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் பங்கேற்று வருகின்றனர்.
  • சர்வகட்சி கூட்டம் எப்போது மீண்டும் கூட்டப்படும் என்பது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
எழுத்து அளவு:

சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் என்ற ஒரு விவகாரத்தை கையிலெடுத்து அவர்கள் தீர்வு முயற்சியை குழப்பியடிக்கும் வகையில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வகட்சி கூட்டம் எப்போது மீண்டும் கூட்டப்படும் என்பது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி பேச்சு நடைபெற்றது. அந்தப் பேச்சு தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதனைக் குழப்பும் வகையில் பிரதான எதிர்க்கட்சி செயற்பட்டு வருகின்றது. இறுதியாக நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் பங்கேற்கவில்லை. எனினும் அந்தக் கட்சியில் தீர்வு தொடர்பில் ஆர்வமுள்ள ஒரு சிலர் பங்கேற்றனர்.

“தீர்வைக் குழப்பியடிக்கும் விடயத்தில் ஜே.வி.பி.யினரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் சேர்ந்து செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

“என்னால் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வகட்சி கூட்டங்களிலும் தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் பங்கேற்று வருகின்றனர். அதேவேளை, ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் தீர்வுக்கான பேச்சில் பங்கேற்று வருகின்றது.

“அடுத்த சர்வகட்சி கூட்டத்தை விரைந்து கூட்டவுள்ளோம். இதற்கு மத்தியில் , தேர்தல் என்ற ஒரு விவகாரத்தை கையிலெடுத்து பிரதான எதிர்க்கட்சியினர் தீர்வு முயற்சியைக் குழப்பியடிக்கும் வகையில் ஈடுபடுவது கவலையளிக்கின்றது.

“தேர்தல் நடக்கும் நேரத்தில் நடந்தே தீரும். அதற்காக தீர்வுக்கான பயணத்தை ஒத்திவைக்க முடியாது. கட்சி பேதமின்றி இந்தப் பயணத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டும். சுதந்திர தினம் அன்று தீர்வு விடயம் தொடர்பில் நான் எனது பொதுவான நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு விசேட உரையூடாகத் தெரிவித்துள்ளேன்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'தீர்வுக்கான பயணத்தை ஒத்திவைக்க முடியாது' | Tamil Leader | We Lead the Nation