Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றி மரணச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை”

T

The Leader Desk

மார்ச் 3, 2023 • 5:00 AM

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றி மரணச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னெடுத்துள்ஏதாகவும் ஓ.எம்.பியால் முடியாததை பிரதேச செயலகங்கள் ஊடாக செயற்படுத்துவதே அரசின் திட்டம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 13,14 வருடம் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஓ எம் பி என்கின்ற அலுவலகம் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள்.
  • அதிலும், குறிப்பாக நீதி அமைச்சின் கீழ் பதிவு செய்வதாக கூறியிருக்கின்றார்கள்.
எழுத்து அளவு:

முன்னெடுத்துள்ஏதாகவும் ஓ.எம்.பியால் முடியாததை பிரதேச செயலகங்கள் ஊடாக செயற்படுத்துவதே அரசின் திட்டம்  எனவும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 13,14 வருடம் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்  ஓ எம் பி என்கின்ற அலுவலகம் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள். குறித்த இந்த  ஓ எம் பி அலுவலகத்தில் பதிவினை மேற்கொள்வதற்கு எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனால் ஓ எம் பி அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்கு போகவில்லை. ஆகையால் ஓ எம்பி அலுவலகத்தில்  பதிவினை மேற்கொள்வதற்கு உறவுகள் வருகை தரவில்லை என்பதால், தற்பொழுது இரண்டு நாட்களாக  கிராம சேவையாளர் ஊடாக அறிவித்து பிரதேச சபையில், நாளை பதிவினை மேற்கொள்வதாக கூறி உள்ளார்கள்.

அதிலும், குறிப்பாக நீதி அமைச்சின் கீழ் பதிவு செய்வதாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் நமது உறவுகளுக்கு நீதி அமைச்சின் கீழ் பதிவு செய்வது என்பது விளக்கம் இன்மை காரணமாக குழப்பமடைந்துள்ளார்கள்.

 ஆகவே நாம் எமது உறவுகளுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், நீதி அமைச்சின் கீழும்  ஓ எம் பி  அலுவலகம்  தான் பதிவுகளை  மேற்கொள்கின்றது .மரண சான்றிதழ் களுக்கான ஆவணங்களை தான் கேட்டிருக்கின்றார்கள், எந்த இடத்தில் காணாமல்போனது  என்கின்ற விடயம் தொடர்பில் சத்தியக்கடதாசி பூர்த்தி செய்து கொண்டுவர கூறியிருக்கின்றார்கள். அது மரண சான்றிதழ் களுக்கான ஆவணங்கள் என்பதனை  உறவுகளுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

“ஓ எம் பி என்கின்ற அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்கு வருகை தராத உறவுகளுக்கான பதிவாக இந்த பதிவு காணப்படுகின்றது. இதனை காணமல் ஆக்கப்பட் ட உறவுகளுக்கு தெரியப்படுத்த்துகின்றோம்' என்கிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...