Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம்'

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2023 • 5:32 AM

'வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம்'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நாம் தீர்மானத்தை மேற்கொள்வோம் இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • மீனவர்களின் வாழ்வில் எவரும் விளையாடக்கூடாது.
  • ‘இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்கின்றது.
எழுத்து அளவு:

பரிசீலனையிலேயே உள்ளது. வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நாம் தீர்மானத்தை மேற்கொள்வோம் இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வடக்கு கடற்பகுதியில் அனுமதி பெற்று இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கலாம் என்று தெரிவித்த கருத்துக்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

‘இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்கின்றது. இதனால் இரண்டு நாடுகளின் நட்புறவில் பாதிப்பும் ஏற்படக்கூடும். எனவே, இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தரத்தீர்வு காணவேண்டும்.

இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வடக்கிலும், தமிழகத்திலும் பலர் அரசியல் ஆதாயமும் தேடுகின்றனர். மீனவர்களின் வாழ்வில் எவரும் விளையாடக்கூடாது. நீங்கள் என்னிடம் கேட்ட விடயம் பரிசீலனையில் உள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை முடிவு எடுக்கும். அதனை நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு அந்தத் தீர்மானம் அமையும்’ என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...