Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலை பகல் அகற்றப்பட்டது

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2023 • 4:30 AM

இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலை பகல் அகற்றப்பட்டது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புத்தர் சிலையொன்று, அப்பிரதேச மக்களின் எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்டுள்ளது.
  • யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை பிரதேச இராணுவ முகாமுக்கு அண்மித்திருக்கும் அரச மர அடிவாரத்திலேயே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 23ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்த நாள் காலை அவதானித்துள்ள பிரதேசவாசிகள், அச்சுவேலி பொலிஸ், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எழுத்து அளவு:

புத்தர் சிலையொன்று, அப்பிரதேச மக்களின் எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்டுள்ளது.

முதல் நாள் இரவு வைக்கப்பட்ட இந்தச் சிலை, அடுத்த நாள் பகலே, பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை பிரதேச இராணுவ முகாமுக்கு அண்மித்திருக்கும் அரச மர அடிவாரத்திலேயே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்த நாள் காலை அவதானித்துள்ள பிரதேசவாசிகள், அச்சுவேலி பொலிஸ், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பௌத்தர்கள் எவருமில்லா பிரதேசங்களில் காணப்படும் அரச மரங்களில் இவ்வாறு புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு பின்னர், அவ்விடத்துக்கு பௌத்த பிக்குமார் வரவழைக்கப்பட்டு, அவர்களை அங்கு தங்கவைத்து, நிரந்தர வதிவிடங்கள் ஏற்படுத்தப்படுவதாலேயே தாங்கள் இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினரை நீக்கி, அப்பிரதேசங்களின் அதிகாரங்களை பிரதேச சபைகள், மாகாண சபைகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், விகாரைகளை அண்மித்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாமென்று, மஹாநாயக்க தேரர்களால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நிலாவரை பிரதேசத்துக்கு விரைந்து, அங்கிருக்கும் இராணுவ முகாம் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அக்கற்றப்பட்டுள்ளது.

03.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலை பகல் அகற்றப்பட்டது | Tamil Leader | We Lead the Nation