Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

குருந்தூர் மலையில் நடப்பது என்ன?

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2023 • 3:48 AM

குருந்தூர் மலையில் நடப்பது என்ன?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கஜேந்திரன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர்.
  • குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும் தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்து மீன்களும் ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டுள்ளது.
  • தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
எழுத்து அளவு:

கஜேந்திரன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர்.

தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தினரின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குருந்தூர் மலையில் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் விகாரை நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் திடீர் விஜயம் செய்து களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது, குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன் காணப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும் தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்து மீன்களும் ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டுள்ளது.

அங்கு சீருடையில் நின்ற இராணுவத்தினர் பலர் காட்டுக்குள் தம்மை மறைத்துக்கொண்டுள்ளனர்.

கட்டுமானத்திற்கான வாளி போன்ற தடையங்கள் மேற்பகுதியில் காணப்பட்டுள்ளது.

குருந்தூர் குளத்திற்குள் இராணுவத்தை தவிர வேறுயாரும் மீன்பிடிக்கவோ குளத்திற்குள் பிரவேசிக்கவோ முடியாத நிலையில், பெருவாரியான மீன்களைப்பிடித்து கருவாடாக்கி தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகளும் இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – இணையம்

தொடர்புடைய செய்தி...

 

kuru1.jpgkuru2.jpgkuru3.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...