Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் விசேட அறிவிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2023 • 5:36 AM

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் விசேட அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதாவது மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட உள்ளது.
  • இந்நிலையில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
  • விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
  • இவ்வாறானதொரு பின்னணியில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை மே 11ஆம் திகதி வரை நடத்த முடியாதா என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவப்பட்டது.
எழுத்து அளவு:

அதாவது மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் நடைபெறும் நாளில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு, ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை மே 11ஆம் திகதி வரை நடத்த முடியாதா என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி தேர்தல் சட்டரீதியாக நடைபெறுமா என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை, பணம் இருந்தாலும் தேர்தலே கிடையாது என ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவே பல தடவைகள் அறிவித்திருந்தது. அப்படியானால், அத்தகைய தீர்மானம் சட்டரீதியாக அறிவிக்கப்பட்டதா என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம் வினவப்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தேர்தலை நடத்துவது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...