Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'இலங்கை ஒரு பிரிக்கப்படாத நாடு; அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்'

T

The Leader Desk

பிப்ரவரி 23, 2023 • 5:38 AM

'இலங்கை ஒரு பிரிக்கப்படாத நாடு; அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு நாட்டில் அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தெரிவித்தார்.
  • யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
  • ம் திருத்தச் சட்டத்திற்கு மேல் சென்று இது ஒரு பிரிக்கப்படாத நாடு.
எழுத்து அளவு:

வேண்டும் என்றார். ஒரு நாட்டில் அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பில் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து கட்டியெழுப்புவது தொடர்பாகவே கலந்துரையாடினோம்.

தனது தந்தை முன்னர் முன்வைத்த பழைய முறையான கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நகரத்தைக் கட்டியெழுப்பலாம். அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற திட்டக் கருத்தை முன்வைத்தார்.

இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் என்பதை கடந்து இலங்கையின் பிள்ளைகளென செயற்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் உரைத்தார்.

மத ரீதியில் பிரிப்பதை தான் எதிர்ப்பதாலும் அனைத்து மதங்களுக்கும் உதவி செய்திருக்கின்றோம் தொடர்ந்தும் செய்வோம் எனவும் கூறினார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு மேல் சென்று இது ஒரு பிரிக்கப்படாத நாடு. அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார். ஒரு நாட்டில் அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என கூறினார்.

எமது மக்கள் உட்பட தெற்கிலும் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையை நான் எதிர்க்கட்சித் தலைவருக்கு எடுத்துக் கூறினேன்.

இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து போன்ற கட்டமைப்பை உருவாக்கி மக்களிடம் அதிகாரம் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்காகவே மக்கள் சக்தி என்ற கட்டமைப்பையும் உருவாக்கப்பட்டதாக கூறினார்.

படித்தவர்கள் உட்பட பலர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையானது நாட்டின் மிக இறுக்கமான இக்கட்டான நிலையாகும். அது நாட்டிற்கு மிக அபாயகரமானது. அதை ஈடுசெய்ய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம். என்றும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...