Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'தேர்தலுக்கு பணம் தேட திட்டம் தயாராகி வருகிறது'

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2023 • 2:32 PM

'தேர்தலுக்கு பணம் தேட திட்டம் தயாராகி வருகிறது'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கத் தயார் என பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
  • திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
  • ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணலால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • இந்த மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணல் உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
எழுத்து அளவு:

வழங்கத் தயார் என பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பணப்பற்றாக்குறை என்ற பிரச்சினையை அரசாங்கம் முன்வைத்து வருவதாகவும், தேர்தலுக்கான பணத்தை ஒதுக்குவதற்கான திட்டங்கள் இந்த வாரத்தில் தயாரிக்கப்படும் எனவும் பஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் உரிமைகளை தடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இந்த வாரத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணலால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணல் உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

திட்டமிட்டபடி திகதியில் தபால்மூல வாக்கெடுப்பு இடம்பெறாததால், குறித்த வழக்கை 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

மனுதாரர் மற்றும் இடைமனுதாரரால் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படாததால், இந்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...