Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இன்று நள்ளிரவுக்குப் பின் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2023 • 2:23 PM

இன்று நள்ளிரவுக்குப் பின் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 மார்ச் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
  • எனினும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 குறித்த தேர்தல் நடைபெற்றது.
  • இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.
எழுத்து அளவு:

கிடைக்கப்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய நாடாளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் கோராதபட்சத்தில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 மார்ச் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 குறித்த தேர்தல் நடைபெற்றது.

இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.

குறித்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று (20) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகிறது.

எனவே, கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...