மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் எனவும் அனர்த்தங்களை தவிக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் காரணமாக நாவல – கொஸ்வத்தை பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் மின்னல் தாக்கம் காரணமாக நபர் ஒருவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலைமை கவலைக்கிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டே மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கூரைக்கு எஸ்பெஸ்டாஸ் பொருத்தப்பட்டிருமையினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கம் குறித்து வானிலை எச்சரிக்கை
T
The Leader Desk
பிப்ரவரி 20, 2023 • 1:55 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
- இந்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
- மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் எனவும் அனர்த்தங்களை தவிக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

