Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கைப் படகுகள் ஊடுருவியதால் இராமேஸ்வரத்தில் பரபரப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2023 • 4:55 AM

இலங்கைப் படகுகள் ஊடுருவியதால் இராமேஸ்வரத்தில் பரபரப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தகவலினால் இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • இவ்வாறுள்ள தொலை நோக்கியில் நேற்று மாலை பார்வையிட்ட சமயம் சிறிய பிளாஸ்ரிக் படகுகள் 10ற்கும் மேற்பட்டவை இலங்கை இந்திய எல்லைப்பகுதிக்கு அண்மையில் பயணித்துள்ளன.
  • தமிழகத்தின் இராமேஸ்வரம் மாவட்டம் அரிச்சல்முனையை அண்டிய பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தனியாரால் உயர்ந்த பிரதேசத்தில் ஓர் தொலை நோக்கி பொருத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தகவலினால் இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மாவட்டம் அரிச்சல்முனையை அண்டிய பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தனியாரால் உயர்ந்த பிரதேசத்தில் ஓர் தொலை நோக்கி பொருத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருத்தப்பட்டுள்ள தொலை நோக்கியின் மூலம் பகல்வேளைகளில் பார்வையிட்டால் தலை மன்னாரில் பொருத்தப்பட்டுள்ள காற்றாடிகள் முதல் தலைமன்னாரிற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள தீடைகள் வரையில் தென்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறுள்ள தொலை நோக்கியில் நேற்று மாலை பார்வையிட்ட சமயம் சிறிய பிளாஸ்ரிக் படகுகள் 10ற்கும் மேற்பட்டவை இலங்கை இந்திய எல்லைப்பகுதிக்கு அண்மையில் பயணித்துள்ளன.

இதனால் இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு வழங்கிய சமயம் பொலிசாரும் அதனை உறுதி செய்தமையினால் இலங்கையில் இருந்து பெருந்தொகை அகதிகளே படையெடுத்து வருகின்றனர் எனக் கருதி கடற்கரைக்கு அதிக பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரைக்கு சென்ற பொலிசார் நீண்ட நேரமாகியும் படகுகள் கரையை அண்மிக்காது இந்திய எல்லைக்குள் நிற்பதனை அவதானித்து படகுகளை அண்மித்து ஆராய்ந்தபோது அவை அனைத்தும் கன்னியாகுமாரிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களிற்குச் சொந்தமான  படகுகள் என்பதனை உறுதி செய்தமையினால் பரபரப்பு அடங்கியது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...