Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கைக் கடலில் மீன்பிடிக்க இந்தியப் படகுகளுக்கு அனுமதி

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2023 • 4:46 AM

இலங்கைக் கடலில் மீன்பிடிக்க இந்தியப் படகுகளுக்கு அனுமதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உண்மை என கடற்றொழில் அமைச்சு வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
  • ஏனெனில் இந்திய வத்தையில் 40 முதல் 50 குதிரை வலுக்கொண்ட இயந்திரங்கள் இருக்கும்.
  • ஆனால் ரோளர் படகுகளில் 150 குதிரை வலுக் கொண்ட இயந்திரங்கள் காணப்படுவதனால் அவை தொடர்பில் ஆராயப்படவே மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் டில்லி பயணமாகவுள்ளார்.
எழுத்து அளவு:

உண்மை என கடற்றொழில் அமைச்சு வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

வத்தை எனப்படும் நாட்டுப் படகுகளிற்கு மட்டும் வாரத்தில் இரு நாள்கள் இந்த அனுமதி வழங்குவது தொடர்பில் பேச்சு இடம்பெறவுள்ளது.

ஏனெனில் இந்திய வத்தையில் 40 முதல் 50 குதிரை வலுக்கொண்ட இயந்திரங்கள் இருக்கும். ஆனால் ரோளர் படகுகளில் 150 குதிரை வலுக் கொண்ட இயந்திரங்கள் காணப்படுவதனால் அவை தொடர்பில் ஆராயப்படவே மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் டில்லி பயணமாகவுள்ளார். இதன்போது இதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று இறுதித் தீர்வு எட்டப்படவுள்ளது.

இதேநேரம் இவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில் இந்தியத் தரப்பிடம் இருந்து அறவிடப்படும் நிதி இலங்கையின் திறைசேரிக்கு அன்றி நேரடியாகவே வடக்கு மீன்பிடி அபிவிருத்திக்கு பயன்படுத்தும் வழி முறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முன் ஏற்பாடுகள் அண்மையில் யாழ்ப்பாணம் ஊடாக பயணித்த இந்திய அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் மேற்கொண்டதாகவும், இருந்தபோதும் ட்ரோளர் படகுகள் தொடர்பில் எந்தவொரு பேச்சிற்கும் சந்தர்ப்பமே இல்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கைக் கடலில் மீன்பிடிக்க இந்தியப் படகுகளுக்கு அனுமதி | Tamil Leader | We Lead the Nation