Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2023 • 3:59 AM

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் அடிப்படையில் விரைவில் இரு நாட்டு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் விரைவில் அதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் இந்திய மீனவ வளத்துறை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
  • இந்த மையம் யாழ்பாண மக்களின் நலனுக்காக முற்றிலும் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டது என்று முருகன் கூறினார்.
  • யாழ்ப்பாணம் கலாசார மையம் திறப்பு விழா முடிந்து, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழகப் பிரிவுத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பினர்.
எழுத்து அளவு:

இதன் அடிப்படையில் விரைவில் இரு நாட்டு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் விரைவில் அதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் இந்திய மீனவ வளத்துறை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கலாசார மையம் திறப்பு விழா முடிந்து, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் மற்றும் பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழகப் பிரிவுத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பினர்.

இதன்போது செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அமைச்சர் முருகன், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம், இலங்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

இந்த மையம் யாழ்பாண மக்களின் நலனுக்காக முற்றிலும் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டது என்று முருகன் கூறினார்.

2015 மார்ச் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தநிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது என அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...