Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'சமஷ்டி தீர்வைக் கேட்காதீர்கள்; ஒருபோதும் நிறைவேற்றவே முடியாது'

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2023 • 3:57 AM

'சமஷ்டி தீர்வைக் கேட்காதீர்கள்; ஒருபோதும் நிறைவேற்றவே முடியாது'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது" என்று இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ.
  • சாந்த பண்டார தெரிவித்தார்.
  • இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வடக்கு - கிழக்குதமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை கேட்பது அரசியல் தீர்வைத்தான்.
எழுத்து அளவு:

நாம் கடும் எதிர்ப்பு. ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது" என்று இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ. சாந்த பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"வடக்கு - கிழக்குதமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை கேட்பது அரசியல் தீர்வைத்தான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்குச் செல்கின்ற போது தமிழ் மக்கள் அரசியல் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்றும், நாட்டைப் பிரிப்பதற்கு இடமளிக்கமாட்டாது என்றும் ஜனாதிபதி கூறி வருகின்ற போதிலும் சிலர் ஜனாதிபதிக்கு எதிராக - அரசியல் தீர்வுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.

தமிழ்த் தலைவர்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். தயவு செய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம். சமஷ்டிக்கு நாம் கடும் எதிப்பு. ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது.

தமிழ்த் தலைவர்கள் சிலர் உண்மையில் தீர்வை விரும்பவில்லை. தீர்வு கிடைத்துவிட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. இதனால்தான் அவர்கள் வழங்கப்பட முடியாத சமஷ்டி தீர்வைக் கேட்கின்றனர்.

நாம் ஒற்றையாட்சிக்குள் தீர்வை வழங்கத் தயார். அரசு தேர்தலை ஒத்திப்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

பொருளாதாரப் பிரச்சினை என்று வரும்போது அது இந்த நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல. முழு நாட்டிலும் உள்ளது. இங்கிலாந்தில்கூட இப்போது வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்துள்ளது.

இப்போது எமது நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வருட இறுதிக்குள் நாம் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவோம். மக்கள் அனைவரும் எமது இந்த வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...