Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சஜித் மீது அதிருப்தி; விலகினார் வடிவேல் சுரேஸ்!

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2023 • 5:19 PM

சஜித் மீது அதிருப்தி; விலகினார் வடிவேல் சுரேஸ்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
  • பதுளை – மடுல்சீமையில் இன்று (9) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில் பங்கேற்க முடியாது என பின்னர் அறியப்படுத்தி இருந்ததாக வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
  • எனினும், குறித்த சந்தர்ப்பத்தில், வெலிமடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சஜித் பிரேமதாஸ பங்கேற்றுள்ளார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை – மடுல்சீமையில் இன்று (9) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில் பங்கேற்க முடியாது என பின்னர் அறியப்படுத்தி இருந்ததாக வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

எனினும், குறித்த சந்தர்ப்பத்தில், வெலிமடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சஜித் பிரேமதாஸ பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இந்த செயற்பாடு தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டுள்ளமையால், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் பசறை தொகுதியின் பிரதம அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக வடிவேல் சுரேஸ் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...