Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு பணிப்புரை

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2023 • 3:48 AM

அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு பணிப்புரை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
  • அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
  • நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு இது குறித்து அறிவித்தார்.

இதற்கமைய சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதியுதவி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவி, சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி உதவி என்பவற்றுக்கு மாத்திரமே நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், தரம் 05 புலமைப்பரிசில் கொடுப்பனவு, மஹபொல உதவித்தொகை, திரிபோஷ வேலைத்திட்டம், உழவர் ஓய்வூதியம், பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்குத் திட்டம், இராணுவம் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினருக்கான கொடுப்பனவு, இராணுவ வீரர்களின் பெற்றோர் பராமரிப்புக் கொடுப்பனவு, ஒத்திவைக்க முடியாத மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய தொலைத்தொடர்பு சேவைகள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், இராணுவத்தினருக்கு உணவு வழங்கல், பராமரிப்பு சேவைகள், கட்டிட வாடகை, துப்புரவு சேவைகள், பாதுகாப்பு சேவைகளுக்கான ஒப்பந்தக் கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதி போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் மற்றும் உர மானியம் வழங்கல், போன்ற நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...