Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கைத் திரைப்படத்துக்கு சர்வதேச அங்கிகாரம்

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2023 • 4:24 AM

இலங்கைத் திரைப்படத்துக்கு சர்வதேச அங்கிகாரம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முழுநீளத் திரைப்படமான “மணல்” விஷேட ஜூரி விருதினை பெற்றுள்ளது.
  • இதேவேளை, விசாகேச சந்திரசேகரம் இயக்கத்தில் உருவாகியுள்ள “மணல்” (Munnel) திரைப்படம் International Film Festival of Rotterdam 2023 இன் உயரிய விருதான Tiger Awards இற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளரான இயக்குனர் விசாகேச சந்திரசேகரம் (Visakesa Chandrasekaram) இதுவரை சிங்கள மொழியில் 2 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
  • அவர் இயக்கிய Frangipani (2014) என்ற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.
எழுத்து அளவு:

முழுநீளத் திரைப்படமான “மணல்” விஷேட ஜூரி விருதினை பெற்றுள்ளது.

விசாகேச சந்திரசேகரம் எழுதி, இயக்கி தயாரித்த இத்திரைப்படம் “ஒரு முன்னாள் தமிழ் போராளி இராணுவ காவலில் இருந்து வெளியாகி, போரின் போது காணாமல் போன தனது காதலியை தேடும்” கதையாக இருக்கிறது.

ஏற்கனவே விசாகேச சந்திரசேகரத்தின் ‘Frangipani’ மற்றும் ‘Paangshu’ ஆகிய இவருடைய திரைப்படங்கள் பல உள்நாட்டு சர்வதேச விருதுகளை பெற்றிருந்தது.

இத்திரைப்படம் ‘புரட்சிக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையில் சிக்குண்ட ஒரு இளைஞனைப் பற்றிய எளிய கதை” என்று விருதினை அளிக்கும் போது நடுவர் குழு குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை, விசாகேச சந்திரசேகரம் இயக்கத்தில் உருவாகியுள்ள “மணல்” (Munnel) திரைப்படம் International Film Festival of Rotterdam 2023 இன் உயரிய விருதான Tiger Awards இற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கேயே படத்தின் முதலாவது திரையிடல் (World Premier) உம் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளரான இயக்குனர் விசாகேச சந்திரசேகரம் (Visakesa Chandrasekaram) இதுவரை சிங்கள மொழியில் 2 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய Frangipani (2014) என்ற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.

இந்நிலையில் தற்சமயம் மணல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற இதன் படப்பிடிப்பில் பங்குபற்றிய அநேக கலைஞர்கள் தமிழர்கள்.

குறிப்பாக ஒளிப்பதிவு ரிஷி செல்வம், இசை பத்மயன் சிவா, ஒப்பனை ஜூலியஸ் அன்ட்ரூ, உதவி இயக்கம் ஜெனோசன் ஜெயரட்னம், தயாரிப்பு முகாமை பரத் பஞ்சாட்சரம், ஆடை வடிவமைப்பு லீலாவதி செல்வராஜ் என பல தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் கைகோர்த்திருக்கின்றார்கள்.

இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சிதும் சமரஜீவவும், கலை இயக்கத்தை சன்ன அசங்கவும், வர்ணச்சேர்க்கையை ஆனந்த பண்டாரவும், ஒலிச்சேர்க்கையை அருண களுஆராய்ச்சியும் மேற்கொண்டுள்ளனர்.

திரைக்கதை எழுதி, இயக்கித் தயாரித்திருக்கின்றார் விசாகேச சந்திரசேகரம். அவருடன் ரிஷி செல்வம், ஜெனோஷன் ஜெயரட்ணம் மற்றும் பரத் பஞ்சாட்சரம் ஆகியோரும் இணைத்தயாரிப்பாளர்களாக கைகோர்த்துள்ளனர்.

“இராணுவ தடுப்பில் இருந்து வந்து தனது தொலைந்து போன காதலியை தேடும் முன்னாள் போராளிக்கு, அவனுடைய காதலிக்கு உண்மையாக என்ன நடந்தது என்பதை போராளியின் சாஸ்திரம் பார்க்கிற அம்மா சொல்ல போகின்றார்” என்பதாக கதை நகர்வதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ட்ரெயிலரைப்பார்க்கும் போதே படத்தினுடைய கனதி தெரிகின்றது. ஒளிப்பதிவு, இசையமைப்பு என நம்மவர்கள் முத்திரை பதித்திருக்கின்றார்கள். படம் வெளியானால் இன்னும் ஆழமாக பல விடயங்களை பேச முடியும். “எங்கட கதைகள்” என்று வந்த படங்களில் இந்தப்படம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு.. உங்களுக்கு விருதுகளும் பாராட்டுக்களும் குவியட்டும். படம் மக்கள் பார்வைக்கும் விரைவில் வரட்டும்..

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கைத் திரைப்படத்துக்கு சர்வதேச அங்கிகாரம் | Tamil Leader | We Lead the Nation