Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'தேர்தலை ஒத்திப்போடுவதாக நான் எங்கும் சொல்லவில்லை'

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2023 • 4:13 AM

'தேர்தலை ஒத்திப்போடுவதாக நான் எங்கும் சொல்லவில்லை'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • அதற்கு "எல்லாத் தேர்தலுக்கும்'' என்றார் ரணில்.
  • இதனால் திட்டமிட்ட திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கலாம் என்ற முடிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வந்துள்ளார்கள் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எழுத்து அளவு:

முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் திட்டமிட்ட திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கலாம் என்ற முடிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வந்துள்ளார்கள் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல அரச தரப்பு எம்.பிக்களுக்கும்தான் உண்டு. தேர்தல் நடக்குமா, இல்லையா என்று ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு மட்டும்தான் தெரியும்.

அவர் இறுதி நேரத்தில் என்ன முடிவை எடுக்கப்போகின்றார் என்று அவர் மட்டுமே அறிவார். அவரது திட்டங்களை அவரது ஆட்களுக்கே சொல்லமாட்டார். இதனால் அரசுக்கே குழப்பம்தான்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இது பற்றி பேசப்பட்டது. தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்றார் ரணில்.

அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன எந்தத் தேர்தலுக்கு என்று கேட்டார். அதற்கு "எல்லாத் தேர்தலுக்கும்'' என்றார் ரணில்.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா என்று அங்கிருந்தவர்கள் ரணிலிடம் மீண்டும் கேட்டனர். நான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதாக எங்கும் சொல்லவில்லையே என்றார் ரணில்.

இதனால் தேர்தல் நடக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்.

மற்றுமொரு கூட்டம் பஸில் ராஜபக்சவுக்கும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்றது. அங்கு தேர்தல் கட்டாயம் இடம்பெறும் என்றார் பஸில். இதனால் மொட்டுக் கட்சியின் பக்கம் இருந்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது.

அதுமாத்திரமன்றி, இந்தத் தேர்தலில் மொட்டுக் கட்சியை வழிநடத்திச் செல்லும் பஸில் மொட்டின் வெற்றி, தோல்வியைப் பற்றி அக்கறைகொள்ளவில்லையாம். அவருக்குத் தெரியும் உண்மையான நிலைமை. அதனால் தேர்தலை நடத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டில் உள்ளாராம் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'தேர்தலை ஒத்திப்போடுவதாக நான் எங்கும் சொல்லவில்லை' | Tamil Leader | We Lead the Nation