Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு

T

The Leader Desk

பிப்ரவரி 6, 2023 • 3:20 AM

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
  • சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, அவரது 4 வயது மகள் மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத பிரேசிலியப் பெண் ஆகியோருடன் ஜகார்த்தாவுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • இச்சம்பவத்தின் பின்னர் ஜகார்த்தாவிற்குச் சென்ற மூவரும் செவ்வாய்க்கிழமை தோஹாவிற்கு விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, அவரது 4 வயது மகள் மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத பிரேசிலியப் பெண் ஆகியோருடன் ஜகார்த்தாவுக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுபசிங்க கடைசியாக கடந்த செவ்வாய்க் கிழமை (02) கொழும்பில் உள்ள தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு தொடர்பு இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சுபசிங்கவை விசாரிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் பலமுறை முயன்றும் அறையின் கதவு திறக்கப்படாததால், நிர்வாகத்தினர் கதவை உடைத்து அறைக்குள் நுழைந்து சோதனையிட்ட போது  சுபாசிங்கின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

இதன்போது குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட போது சுபசிங்காவின் மனைவி, மகள் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஆகியோர் செவ்வாய்கிழமை வாசலில் 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை வைத்துவிட்டு அந்த குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் பின்னர் ஜகார்த்தாவிற்குச் சென்ற மூவரும் செவ்வாய்க்கிழமை தோஹாவிற்கு விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஜகார்த்தா பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், இந்த சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த சுபசிங்க அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளதாக ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

முதலீடுகள், கல்வி மற்றும் அனுபவம் பற்றிய அவரது அறிவு OPEX ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சாதனைகளை கொண்டு வந்துள்ளது.

OPEX நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு விசேட திரவ உரங்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முதலாவது நிறுவனமாகும், மேலும் இலங்கையின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து முகாமைத்துவத் துறையில் முன்னோடியாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு | Tamil Leader | We Lead the Nation