Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

எரிவாயு, எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

T

The Leader Desk

பிப்ரவரி 6, 2023 • 3:13 AM

எரிவாயு, எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
  • இந்த வருட இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சர்வதேசத்தின் உதவிகள் வந்துகொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இதேவேளை, நேற்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
  • அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாயினாலும் 05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாயினாலும் அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்தப் புறம்பான செயல்களுக்கும் பணத்தைச் செலவழிக்கும் திறன் திறைசேரிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பணம் செலவழிக்கப்பட்டால், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி மற்றும் பிற மானியங்களும் தாமதமாக வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தற்போது வரை தேசிய திறைசேரியின் செலவு நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும், தற்போதைய நிலைமையை சமாளிக்காவிட்டால் மீண்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சர்வதேசத்தின் உதவிகள் வந்துகொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாயினாலும் 05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாயினாலும் அதிகரித்துள்ளது.

எனவே நேற்று நள்ளிரவில் இருந்து 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,743 ரூபாய்க்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இதேவேளை 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 822 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...