Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'தேர்தலுக்கு அஞ்சவில்லை; தேர்தல் செலவுகளுக்கே அஞ்சுகிறோம்': நிதி அமைச்சு அறிவிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 6, 2023 • 2:55 AM

'தேர்தலுக்கு அஞ்சவில்லை; தேர்தல் செலவுகளுக்கே அஞ்சுகிறோம்': நிதி அமைச்சு அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
  • கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
  • நாணயம் அச்சிடுவதற்கு மட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனை அரசாங்கத்திற்கு கிடையாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிவில் பிரஜை ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் நிதியமைச்சின் செயலாளர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது” என்றார்.

“நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

“தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது, இருப்பினும் தேர்தல் செலவுகளை கண்டு அச்சமடைகிறோம். நாணயம் அச்சிடுவதற்கு மட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறன பின்னணியில் தேர்தலுக்காக நிதி அச்சிட்டால் பணவீக்கம மீண்டும் உயர்வடைந்து பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும்.

“அரச செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் சகல அரச நிறுவனங்களுக்கும் விசேட சுற்று நிரூபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் செலவுகளை குறைப்பதற்கும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தற்போது வெற்றியடையடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

“சிறந்த முகாமைத்துவத்தினால் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு அனைத்து தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...