Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

‘தீர்வுக்கான பேச்சுவார்த்தை வெற்றியுடன் நிறைவேறும்’

T

The Leader Desk

பிப்ரவரி 6, 2023 • 2:10 AM

‘தீர்வுக்கான பேச்சுவார்த்தை வெற்றியுடன் நிறைவேறும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
  • இதேவேளை, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை அண்மையில் சந்தித்த ஜனாதிபதி, சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
  • எனினும் 13ஆம் திருத்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்தத் தெரிவித்துள்ள அவர், அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்தும் கட்சிகளுடன் தனித்தனியாகவும் இரு வழிகளில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், “வடக்கிலும் இனப்பிரச்சினை இருக்கிறது. கிழக்கிலும் மலையகத்திலும்கூட பிரச்சினைகள் உள்ளன. ஏன், தெற்கிலும் பிரச்சினைகள் உள்ளன. அதனால், தேசிய பிரச்சினை தொடர இடமளிக்கக்கூடாது. அந்தப் பிரச்சினை தொடர்ந்தால், நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது. எனவேதான், விரைந்து தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன” என்று மேலும் குறிப்பிட்டார்.  

இதேவேளை, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை அண்மையில் சந்தித்த ஜனாதிபதி, சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்பின் முழுமை நடைமுறைக்கு மகாநாயக்கர்கள் இருவரும் தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் அதனை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் 13ஆம் திருத்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒன்றை அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது தமது பொறுப்பு என்றும் அவர் கூறியதாக தேசிய ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக அதனை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியா தமது வலியுறுத்தலை தொடர்ந்தும் விடுத்து வருகிறது.

எனினும், தென்னிலங்கையின் சிங்கள கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில், விரைவில் எதிர்பார்க்கப்படும் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது இது தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘தீர்வுக்கான பேச்சுவார்த்தை வெற்றியுடன் நிறைவேறும்’ | Tamil Leader | We Lead the Nation