Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'ஜிமிக்கி பொண்ணு' பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக்பாஸ் ஜனனி

T

The Leader Desk

பிப்ரவரி 2, 2023 • 4:26 PM

'ஜிமிக்கி பொண்ணு' பாடலுக்கு ஆட்டம் போட்ட பிக்பாஸ் ஜனனி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இம்முறை பிக்பாஸ் போட்டியாளர்களுள் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளராக கொண்டாடப்பட்டவர்தான் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளரான ஜனனி.
  • குறிப்பாக இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஜனனிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • பிக்பாஸ் வீட்டில் ஒரு செல்லப்பிள்ளையாக ஆரம்பத்தில் இருந்த ஜனனிக்கு பிக்பாஸ் வீட்டிலும் சரி உலக வாழ் தமிழ் சொந்தங்களாலும் சரி நாளுக்கு நாள் ஆதரவு அலை பெருகியிருந்தது.
எழுத்து அளவு:

இம்முறை பிக்பாஸ் போட்டியாளர்களுள் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளராக கொண்டாடப்பட்டவர்தான் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளரான ஜனனி.

பிக்பாஸ் வீட்டில் ஒரு செல்லப்பிள்ளையாக ஆரம்பத்தில் இருந்த ஜனனிக்கு பிக்பாஸ் வீட்டிலும் சரி உலக வாழ் தமிழ் சொந்தங்களாலும் சரி நாளுக்கு நாள் ஆதரவு அலை பெருகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்ததுடன் பிக்பாஸ் வீட்டில் இறுதி வரை இவர் பயணிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஜனனிக்கு படவாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஜனனிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறனதொரு நிலையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனனி இடையிடையே தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாரிசு படத்தில் வந்த ஜிமிக்கி பாடலுக்கு கறுப்பு சாரியில் ஏற்ப அசைந்தபடி ஜனனி இருக்கின்றார். குறித்த வீடியோ தற்போது ஏராளமான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகின்றது. 

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...