Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பெற்றோல் விலை அதிகரிப்பு; அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 2, 2023 • 4:30 AM

பெற்றோல் விலை அதிகரிப்பு; அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் குறைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.
  • இதற்கமைய, புதிய விலை 400 ரூபாய் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
  • அதேபோன்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையினை 30 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
  • இதேவெளை, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.

இதற்கமைய, புதிய விலை 400 ரூபாய் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதேபோன்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையினை 30 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதேவெளை, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த பொருட்களின் விலை குறைப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ஆயிரத்து 675 ரூபாய்க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 165 ரூபாய்க்கும், உள்நாட்டு சிவப்பரிசி 169 ரூபாய்க்கும், கோதுமை மா 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, பெற்றோல் விலையைத் திடீரென அதிகரித்ததன் உள்நோக்கம் என்ன என்று எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றதா என்றும் எதிரணிகள் வினாத் தொடுத்துள்ளன.

இதனூடாகத் தேர்தலை ஒத்திவைக்க அரசு சதி செய்கின்றதா என்றும் எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

இதன்படி, லங்காபெற்றோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 400 ரூபாவாகும்.

எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இதனிடையே, சிபெட்கோ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்துக்கு அமைவாக பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...