Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை; இடைக்காலத் தடை நீடிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2023 • 4:46 AM

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை; இடைக்காலத் தடை நீடிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை உத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மருத்துவ நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டதாக தெரியவருகின்றது.
  • அதன்பிறகு, மனு மீதான விசாரணையை மார்ச் 24, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயித்த நீதிபதிகள் குழாம், தற்போது பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை மார்ச் 29ஆம் திகதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
எழுத்து அளவு:

உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை உத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

176 மருத்துவ நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டதாக தெரியவருகின்றது.

அதன்பிறகு, மனு மீதான விசாரணையை மார்ச் 24, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயித்த நீதிபதிகள் குழாம், தற்போது பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை மார்ச் 29ஆம் திகதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

நிபுணர்கள் பொதுவாக 63 வயது வரை பயிற்சி செய்ய முடியும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி, 60 வயதில் மருத்துவர்களுக்கு ஓய்வு அளிக்க அமைச்சரவை முடிவு செய்தது, இந்த முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர் வைத்தியர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை; இடைக்காலத் தடை நீடிப்பு | Tamil Leader | We Lead the Nation