Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'ரணிலின் வலையில் சிக்கி தமிழர்களே ஏமாறாதீர்கள்'

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2023 • 4:25 AM

'ரணிலின் வலையில் சிக்கி தமிழர்களே ஏமாறாதீர்கள்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏமாற்ற முயற்சிக்கின்றார்.
  • ஊழல், மோசடி இல்லாத கட்சி ஜே.வி.பியே.
  • ரணிலின் இந்தச் சதி வலையில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தமிழ் மக்களிடமும், அவர்களின் பிரதிநிதிகளிடமும் ஜே.வி.பி.
எழுத்து அளவு:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏமாற்ற முயற்சிக்கின்றார். ரணிலின் இந்தச் சதி வலையில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தமிழ் மக்களிடமும், அவர்களின் பிரதிநிதிகளிடமும் ஜே.வி.பி. கேட்டுக்கொள்கின்றது." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஜனாதிபதி கதிரையில் அமர்த்தப்படுள்ள ரணில் விக்கிரமசிங்கவை விரைவில் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்.

ரணிலை விரட்டும் ஜனநாயகப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் கட்சி பேதமின்றி இணைய வேண்டும்.

மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதியாகிய ரணிலை நம்ப வேண்டாம் என்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஊழல், மோசடி இல்லாத கட்சி ஜே.வி.பியே. எனவே, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் நாம் நாடு தழுவிய ரீதியில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஜே.வி.பியின் ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குக் காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வை நாம் வழங்குவோம்.

ரணில் தலைமையிலான அரசுக்குப் பாடம் புகட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. தேர்தல் உரிய திகதியில் நடத்தப்பட வேண்டும். மக்கள் தங்கள் வாக்குகளால் இந்த அரசுக்குப் பதிலடி வழங்க வேண்டும்" - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'ரணிலின் வலையில் சிக்கி தமிழர்களே ஏமாறாதீர்கள்' | Tamil Leader | We Lead the Nation