Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை வாங்க காத்திருப்போருக்கு எச்சரிக்கை

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2023 • 4:19 AM

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை வாங்க காத்திருப்போருக்கு எச்சரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
  • நிதியமைச்சில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் இன்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • எனவே தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலோ இந்த எண்ணைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படும்.
எழுத்து அளவு:

எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத இறக்குமதிகளினால் நாடு பெருமளவு வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதியமைச்சில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் இன்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கையடக்கத் தொலைபேசிகளின் IMEI எண்களும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலோ இந்த எண்ணைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படும்.

ஆனால் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் தொலைபேசிகள் அவ்வாறு பதிவு செய்யப்படுவதில்லை. கூடுதலாக, சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து தொலைபேசிகளும் பாதுகாப்பானவை என சரிபார்க்கப்படுகின்றன.

இந்த விடயங்களை ஆராய்ந்த இராஜாங்க அமைச்சர், இது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக்குமாறு சுங்கத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கோரியுள்ள இராஜாங்க அமைச்சர், சட்டவிரோத இறக்குமதியைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களத்துக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...