Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கக்கூடியவர் ரணிலே'

T

The Leader Desk

ஜனவரி 31, 2023 • 3:14 AM

'நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கக்கூடியவர் ரணிலே'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்" என்று ஸ் ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
  • 'மொட்டுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேண்டாம் என்பதுதானே இதன் அர்த்தம்.
  • உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் அதிக சபைகளைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியடையும் என்றும் அவர் அடித்துக் கூறினார்.
எழுத்து அளவு:

மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்" என்று ஸ் ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் அதிக சபைகளைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியடையும் என்றும் அவர் அடித்துக் கூறினார்.

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ரணில் விக்கிரமசிங்கவை நாம் ஏன் ஜனாதிபதியாக நியமித்தோம் என்று பலரும் கேள்விகளை எழுப்புகின்றார்கள். மக்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள பிரதமரை வேண்டாம் என்றார்கள். அதனால் பிரதமர் பதவிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினரக்ளின் வீடுகளையும் அவர்கள் எரித்தார்கள்.

'மொட்டுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேண்டாம் என்பதுதானே இதன் அர்த்தம். ஆகையால் மொட்டில் இருந்து ஒருவரை நியமிக்கும் உரிமை எங்களுக்கு இல்லை. அதனால்தான் நாம் ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்தோம். எங்களுக்கு அப்போது இருந்த மாற்று வழி அது ஒன்றுதான்.

'மேலும், அவர் ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்" - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...