Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கச்சத்தீவு ஆந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு நன்கொடை கோருகிறது அரசாங்கம்

T

The Leader Desk

ஜனவரி 30, 2023 • 4:59 AM

கச்சத்தீவு ஆந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு நன்கொடை கோருகிறது அரசாங்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆதரவு அளிக்குமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நடைபெறும் தேவாலய திருவிழாக்களில் மொத்தம் 8,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • இவர்களில் 3,500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
  • முந்தைய ஆண்டுகளில் அங்கு வரும் அடியார்களுக்கு உணவு மற்றும் பிற குளிர்பானங்கள் வழங்கப்பட்ட நிலையில், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டு உணவு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஆதரவு அளிக்குமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதன் பின்னர் இந்தியாவில் இருந்து வரும் மக்கள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நடைபெறும் தேவாலய திருவிழாக்களில் மொத்தம் 8,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3,500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். முந்தைய ஆண்டுகளில் அங்கு வரும் அடியார்களுக்கு உணவு மற்றும் பிற குளிர்பானங்கள் வழங்கப்பட்ட நிலையில், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டு உணவு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக வரும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு மார்ச் 4 ஆம் திகதியன்று காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 3ஆம் திகதி கொடியேற்றத்திற்குப் பிறகு திருவிழா ஆரம்பமாகும். திருவிழாவின் நிறைவாக மார்ச் 4 ஆம் திகதி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலிருந்து பங்கேற்கும் அருட்தந்தையர்களின் மாபெரும் நற்கருணை ஆராதனை நடைபெறும்.

யாழ்.மாவட்ட ஆட்சியர் சிவபாதசுந்தரம், இதேவேளை இந்த முறை, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 8,000 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், யாத்திரிகர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏற்பாடுகளை அவர்களே செய்ய வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஆர்வமுள்ள புரவலர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு நன்கொடை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...