Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு?': கறுப்பு தினத்தை அனுஷ்டிக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு

T

The Leader Desk

ஜனவரி 30, 2023 • 4:10 AM

'சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு?': கறுப்பு தினத்தை அனுஷ்டிக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கறுப்பு தினமான அனுஸ்ரிக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
  • மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
  • எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை(29) யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மன்னாரிற்கு வருகை தர உள்ளனர்.
எழுத்து அளவு:

கறுப்பு தினமான அனுஸ்ரிக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. எனினும் சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்காக? என்பதன் அடிப்படையில் தமிழர்களாகிய நாங்களும் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அன்றைய நாளை கருப்பு தினமாக அனுஷ்டிக்க இருக்கின்றோம்.

பல்கலைக்கழக மாணவர்கள் முன் நின்று ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளார்கள். எனவே கருப்பு தினத்தை அனுஷ்டிக்க மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள், உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை(29) யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மன்னாரிற்கு வருகை தர உள்ளனர். இதன் அனைவரும் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எங்களுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் சுமார் 14 வருடங்களாக வீதியில் நின்று போராடி வருகிறோம்.

எங்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் எங்களுடன் இணைந்து கொள்கிறார்கள்.

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கருப்பு தினமான அனுஸ்ரிக்கின்றோம்.

இந்த அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை.ஒவ்வொரு மாதமும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

சர்வதேச நாடுகளும் இது வரை எமக்கு உரிய தீர்வை பெற்றுத் தரவில்லை.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 128 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த உறவுகள் காணாமல் ஆக்கப்படட தமது உறவுகள், பிள்ளைகள் வருவார்கள் என்று ஏங்கித் தவித்த நிலையில் அவர்கள் மரணித்துள்ளனர்.

எனவே சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது கருப்பு தின போராட்டத்திற்கு அனைத்து தரப்புகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் எமது கருப்பு தின போராட்டம் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...