Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தொடர்ந்தும் மின்வெட்டு: சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் மனித உரிமைகள் ஆணைக்குழு

T

The Leader Desk

ஜனவரி 27, 2023 • 8:21 AM

தொடர்ந்தும் மின்வெட்டு: சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் மனித உரிமைகள் ஆணைக்குழு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது.
  • இதேவேளை, ஜனவரி 26 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதை தாம் அனுமதிக்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
  • இதனிடையே, வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 21 ஆவது சரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
  • உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் தலைவர் நலிந்த இளங்கோன் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது.

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பரீட்சை காலத்தில் மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறாயினும், உறுதியளிக்கப்பட்ட போதிலும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, ஜனவரி 26 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதை தாம் அனுமதிக்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய கட்டளைக்கு அமைய, குறித்த காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ளுமாறு, மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 21 ஆவது சரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

திட்டமிட்டவாறு மின்வெட்டினை தொடர்ந்தும் அமுல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு

திட்டமிட்டவாறு மின்வெட்டினை தொடர்ந்தும் அமுல்படுத்துவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை அதிகாரிகளினால் இதுவரையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமை காரணமாகவே, இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் தலைவர் நலிந்த இளங்கோன் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...