Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'வெந்து தணிந்தது காடு' ஈழத்திரைப்படத்தை வெளியிடத் தடை

T

The Leader Desk

ஜனவரி 26, 2023 • 3:37 PM

'வெந்து தணிந்தது காடு' ஈழத்திரைப்படத்தை வெளியிடத் தடை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் உருவாகிய 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
  • இந்நிலையில் குறித்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான அடுத்தகட்ட நகர்வுகளில் திரைப்பட குழுவினர் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த திரைப்படம் திரையிடப்படாமல் போனால் நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை மீள வழங்குவோம் என இயக்குநர் மதிசுதா அறிவித்துள்ளார்.
  • இயக்குநர் உரிய அனுமதிகளை பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த படத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் உருவாக்கியிருந்தும் இறுதி நேரத்தில் இவ்வாறு தடை ஏற்பட்டுள்ளமை ஈழ கலைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் உருவாகிய 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை குறித்த திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகி வரும் நிலையில் குறித்த திரைப்படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் குறித்த திரையரங்குகளுக்கு அறிவித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான அடுத்தகட்ட நகர்வுகளில் திரைப்பட குழுவினர் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த திரைப்படம் திரையிடப்படாமல் போனால் நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை மீள வழங்குவோம் என இயக்குநர் மதிசுதா அறிவித்துள்ளார்.

இயக்குநர் உரிய அனுமதிகளை பெற்று கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த படத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் உருவாக்கியிருந்தும் இறுதி நேரத்தில் இவ்வாறு தடை ஏற்பட்டுள்ளமை ஈழ கலைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த திரைப்படமானது திரையரங்குகளில் திரையிட தடைவிதிக்கப்பட்டதற்கு எதிராக பலரும் தமது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VTK01.jpg

VTK03.jpg

VTK02.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'வெந்து தணிந்தது காடு' ஈழத்திரைப்படத்தை வெளியிடத் தடை | Tamil Leader | We Lead the Nation