Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மின் தடையினால் படிக்க முடியாமல் மாணவர்கள் பாதிப்பு

T

The Leader Desk

ஜனவரி 26, 2023 • 4:09 AM

மின் தடையினால் படிக்க முடியாமல் மாணவர்கள் பாதிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவர்களாகிய தாம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக மாந்தை கிழக்கு பகுதியில் இந்த தடவை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
  • இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • அடுத்த மூன்று மாதங்களில் 21 கப்பல்கள் நிலக்கரி இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  • ஜனவரி வரும் என எதிர்பார்க்கப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 கப்பல்கள் வந்துள்ளது என்றும் மீதமுள்ள இரண்டு கப்பல்கள் இம்மாதத்திற்குள் வரும் என்றும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

மாணவர்களாகிய தாம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக மாந்தை கிழக்கு பகுதியில் இந்த தடவை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள் உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியிலாவது மின்சார தடையினை நிறுத்தி சீரான முறையில் மின்சாரத்தை வழங்குமாறும் , அவ்வாறு வழங்கும் பட்சத்தில் தம்மால் பரீட்சைகள் மீதும் ,உரிய கவனம் செலுத்த கூடியவாறு இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை மின்தடை பற்றி கருத்து தெரிவித்த பெற்றோர் , மாணவர்களின் நிலையினை கருத்தில் கொண்டாவது இந்த பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதிகளிலேன்றாலும் சீரான மின்சார விநியோகத்தை வழங்குமாறும் தெரிவித்தனர்

பெப்ரவரி 17 வரை மின்வெட்டு இல்லை

இதேவேளை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சக்தி, வலுசக்தி அமைச்சு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

இதேவேளை, முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலக்கரி வாங்க இரண்டு வங்கிகளுடன் பேச்சு

மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரி இறக்குமதிக்கு நிதியளிப்பதற்காக இரண்டு அரச வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

அடுத்த மூன்று மாதங்களில் 21 கப்பல்கள் நிலக்கரி இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனவரி வரும் என எதிர்பார்க்கப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 கப்பல்கள் வந்துள்ளது என்றும் மீதமுள்ள இரண்டு கப்பல்கள் இம்மாதத்திற்குள் வரும் என்றும் அவர் கூறினார்.

வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன் வசதிகளின் அளவுக்கேற்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனை கொண்டு குறைந்தளவிலான மின்சார துணிடப்போடு மின்சாரம் வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...