Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'ராஜபக்ஷர்களின் முதுகில் சவாரி செய்யும் ரணில்'

T

The Leader Desk

ஜனவரி 25, 2023 • 6:51 AM

'ராஜபக்ஷர்களின் முதுகில் சவாரி செய்யும் ரணில்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் நடைபெற்றால் மீண்டும் நிராகரிக்கப்படுவோம் எனும் அச்சத்தினாலேயே அரசாங்கம் தேர்தலைப் பிற்போட எத்தனிக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
  • அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் அதுதான் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
  • உள்ளுராட்சித் தேர்தல் குறித்து சமூகம் ஊடகத்துக்கு இன்று பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார் மேலும் கருத்து தெரிவித்த கஜேந்திரன், உண்மையிலேயே பாராளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடைபெற்றிருக்க வேண்டும்.
எழுத்து அளவு:

தேர்தல் நடைபெற்றால் மீண்டும் நிராகரிக்கப்படுவோம் எனும் அச்சத்தினாலேயே அரசாங்கம் தேர்தலைப் பிற்போட எத்தனிக்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல் குறித்து சமூகம் ஊடகத்துக்கு இன்று பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

மேலும் கருத்து தெரிவித்த கஜேந்திரன்,

உண்மையிலேயே பாராளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடைபெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் பாராளுமன்ற அடிப்படையில் மக்கள் வழங்கியிருக்கின்ற ஆணை, கடந்த வருடம் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை வீட்டுக்கு அனுப்பியதுடன் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. அதன்படி அரசு ஓர் அங்கீகார,மற்ற செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் முற்றாக .நிராகரிக்கப்பட்ட ஒருவர். அவரது நியமனம் அரசியலமைப்பு ரீதியாக சரியாக இருந்தாலும், மக்களின் ஆணை அடிப்படையில் மக்கள் வெறுக்கும் ஒருவராகவே, நிராகரிக்கும் ஒருவராகவே காணப்படுகிறார். எனவே அங்கு ஒரு மாற்றம் உருவாக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் அவர்களால் முன்னேற்றகரமான ஒரு விடயத்தை சிந்திக்கக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் அதுதான் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அழுத்தம் எதிர்த்தரப்புகளிடம் இருந்து வந்த பொழுது, அல்லது மக்கள் மத்தியில் இருந்து இவர்கள் மீதான வெறுப்பு அதிகளவு வெளிப்படுத்தப்பட்டபொழுது, அதனை சமாளிப்பதற்காக உள்ளுராட்சித் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால் அறிவித்த பிறகும், பிரச்சனைகளை உருவாக்கி தேர்தலை பிற்போடும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதனை மக்கள் நன்றாக விளங்கிக்கொள்வார்கள். தேர்தல் நடைபெறும் பட்சத்தில் மக்கள் அதற்கான பாடத்தை படிப்பிப்பார்கள்.

அரசு அஞ்சுவதற்கான காரணம், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் முதுகில்தான் ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். அவர்கள் பெருமளவு மக்களால் நிராகரிக்கப்படக்கூடிய ஓர் நிலை காணப்படுகிறது.

எனவே இந்த தேர்தல் நடைபெற்றால் மீண்டும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்கின்ற நிலை வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்கின்ற அச்சம் காரணமாகத்தான் இத் தேர்தலை நடத்த பின்னிற்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...