Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர் கோட்டாவா?

T

The Leader Desk

ஜனவரி 25, 2023 • 6:45 AM

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர் கோட்டாவா?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் மக்களால் விரட்டப்பட்டாரா?
  • அதே தீர்ப்பை 2019 இல் இருந்து பொருளாதாரத்தைச் சீரழித்தவர்களுக்கும் நீதிமன்றம் கொடுக்க வேண்டும்.
  • அவர்கள்தான் பிழையான யோசனைகள் வழங்குபவர்கள்.
எழுத்து அளவு:

அவர் மக்களால் விரட்டப்பட்டாரா? எதற்காக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது? ஆட்சியைப் பிடிப்பதற்காகவா அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இவை அனைத்தையும் நீங்கள் நாட்டுக்குக் கூற வேண்டும்" என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சூத்திரதாரியை அரசு மறைத்து வைத்துள்ளது. நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதே தீர்ப்பை 2019 இல் இருந்து பொருளாதாரத்தைச் சீரழித்தவர்களுக்கும் நீதிமன்றம் கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இன்றும் அமைச்சர்களாக உள்ளனர். இன்றும் நாட்டைச் சீரழிக்கின்றனர்.

“சிரேஷ்ட அமைச்சர்களுக்கு நான் எதிரானவன். அவர்கள்தான் இந்த நாட்டைச் சீரழித்தவர்கள். அவர்கள்தான் பிழையான யோசனைகள் வழங்குபவர்கள். நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து கட்டியெழுப்புவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமாக ஆட்சிக்கு வந்ததும் பிரச்சினையைத் தீர்ப்போம் என்றார்கள். அது நடந்ததா? இல்லை.

இந்தத் தாக்குதலை நடத்தியவர் யார்? உங்கள் முன்னாள் தலைவர் கோட்டாபயவா? அதற்காகத்தான் அவர் மக்களால் விரட்டப்பட்டாரா? எதற்காக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது? ஆட்சியைப் பிடிப்பதற்காகவா அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது? நீங்கள் நாட்டுக்குக் கூற வேண்டும். தர்க்கரீதியாக நீங்கள் பிழையை சரி செய்து வெற்றிகொள்ளலாம். ஆனால், மனச்சாட்சியின்படி நீங்கள் தோல்வியடைவீர்கள்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...